வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேர்க்கடலையில் உயர்ந்த கார்போஹைட்ரேட்டுகள் இருக்கின்றன. இதன் எடை குறைக்கும் தன்மையால் வேர்க்கடலை பல உணவுப் பொருட்களுக்கு மத்தியிலும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. வேர்க்கடலையின் நன்மைகள் பற்றி நாம் பல காலங்களாக பேசிக்கொண்டே இருக்கிறோம். உயர் கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு மாற்றாக வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை தயாரிக்கப்பட்ட பொருட்களை எடுத்து கொள்ள உணவியல் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சாதாரண எண்ணெய்க்கு மாற்றாக வேர் கடலை எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதில் அதிக ஊட்டச்சத்து உள்ளதால் இதை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் நமக்கு உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கிறது. இப்படி சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதுபோன்று வேர்க்கடலை சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக்கூடாது. வேர்க்கடலையில் அதிகளவு எண்ணெய் சத்துக்கள் உள்ளன.
எனவே வேர்க்கடலை சாப்பிட பிறகும் தண்ணீர் குடித்தால் உடலில் ரத்த குழாய்களில் கொழுப்புகள் படிந்துவிடும். மேலும் இருமல் மற்றும் தொண்டையில் எரிச்சல் உண்டாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதை சாப்பிட்டபிறகு தண்ணீர் குடிப்பது வயிற்றில் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இனி இந்த தவறை யாரும் செய்ய வேண்டாம்.