இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் எல்லையில் பதட்டம் நிலவுகிறது.
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இந்திய இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருப்பதால், சுரங்கம் அமைத்து தீவிரவாதிகள் ஊடுருவ முயன்று வருகிறார்கள். நேற்று ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஒரு சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 நாட்களில் கண்டுபிடிக்கும் இரண்டாவது சுரங்க பாதையாகும். இதனால் சர்வதேச எல்லையில் பதட்டம் அதிகரித்துள்ளது.
சர்வதேச எல்லையில் ஆளில்லா விமானங்கள் மூலமாக உணவு மற்றும் ஆயுதங்களை பாகிஸ்தான் போட்டு செல்வது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சுரங்க பாதையை பயங்கரவாதிகள் சர்வதேச எல்லையை தாண்டி வர பயன்படுத்தியிருக்கலாம் என்றும் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.