Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த காலத்தில் குழந்தை திருமணமா..?? சிறுமிக்கு நேர்ந்த துயரம்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

குழந்தை திருமணம் நடைபெற்ற சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள விருதம்பட்டு பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமிக்கும், 16 வயது சிறுவனுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த சிறுமி தன் கணவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்ற பின் அந்த சிறுமி தனது வீட்டு மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் வீட்டிற்கு பணி முடிந்து வந்தவர்கள் சிறுமியை தேடியுள்ளனர். அப்போது சிறுமி வீட்டின் மாடியில் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதன்பின் இச்சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்துகின்றனர். அதோடு சமூகநலத்துறை அதிகாரிகள் சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்தது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |