Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொஞ்சம் அதை பற்றி விசாரிங்க…. வசமாக சிக்கியவர்கள்…. கைது செய்த காவல்துறை…!!

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விருதம்பட்டு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடப்பட்டுள்ளது. எனவே இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்பின்னர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது போலீசார் தோட்டப்பாளையத்தில் வசித்து வரும் அஜய் என்பவரிடமும், அம்பேத்கர் நகரில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவரிடமும் விசாரித்தனர். அவர்கள் செங்குட்டை காமராஜ், காங்கேயநல்லூர் இலக்கியச்செல்வன், குமரப்பநகர் ரகுமான் போன்ற 5 பேரின் மோட்டார் சைக்கிளை திருடியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விட்டனர்.

Categories

Tech |