Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இவங்கமேல தான் சந்தேகம்…. காணாமல் போன பசுமாடு… வசமாக சிக்கியவர்கள்…!!

பசுமாட்டை திருடிச் சென்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் பிரபு என்பவர் வசித்துவருகிறார். இவர் இராணிபேட்டை பாலாறு அருகில் உள்ள ஒரு மின் கம்பத்தில் தனது பசுமாட்டை கட்டியுள்ளார். அதன் பின் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, கட்டிவைத்த பசு மாட்டை அங்கு காணவில்லை.

இதனையடுத்து கீரைசாத்து பகுதியில் வசித்து வரும் ஆனந்தன் மற்றும்  எசையநூரில்  வசித்து வரும் ரகுவரன் போன்றோர் பசுமாட்டை திருடி சென்றது பிரபுவிற்கு தெரியவந்துள்ளது. அதன் பின்  பிரபு இதுகுறித்து ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் ஆனந்தன் மற்றும் ரகுவரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |