ஜனவரி 29 ஆம் தேதி முதல்வர் கொரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் கடந்த வருடம் மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொரோனா தாக்கம் மற்றும் உருமாறிய கொரோனா குறித்து மருத்துவர்கள் கருத்துக்களை முதல்வர் பழனிசாமி கேட்டறிந்துள்ளார். மேலும் இது குறித்து முதல்வர் ஜனவரி 29ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.