வேட்பாளர் அறிவிப்பிற்கு யாரும் எதிர்ப்பு தெரிவித்தால் மிதிப்பேன் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். மேலும் இந்த சட்டமன்ற தேர்தல் முக்கிய தலைவர்கள் இல்லாமல் முதன்முதலாக நடக்க இருக்கின்ற தேர்தல் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியலை சீமானால் வெளியிடபட்டது.
இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் அறிவிப்பிற்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் கவுண்டமணி, செந்தில் காமெடியில் கவுண்டமணி கிரீஸ் டப்ப்பவை மிதிப்பது போல மிதித்து விடுவேன் என நாதக தலைவர் சீமான் தொண்டர்களை எச்சரித்துள்ளார். (ஆனால் அந்த படத்தில் செந்தில் தானே கிரீஸ் டப்பாவை மிதிப்பார்).