பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் எளிய முறையில் குடியரசு தின விழாவை எளிமையாக கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் குடியரசு தின விழாவை கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக கல்விக்கூடங்கள் முழுமையாக திறக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு நெறிமுறைகளை பின்பற்றி கல்வி அலுவலகங்கள், பள்ளிகளில் தேசிய கொடியை ஏற்றி எளிய முறையில் கொண்டாடவும், விழாக்களை தவிர்க்கும் படியும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.