காட்டு யானை டயர் வீசி கொலை செய்யப்பட்டதையடுத்து பாதுகாப்பை அதிகரிக்க 5 வனக்காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே யானை ஒன்று தனியாருக்கு சொந்தமான கார்ப்பரேட் அருகில் சென்றதால் அங்கு இருந்தவர்கள் டயரில் பெட்ரோலை ஊற்றி கொழுத்தி யானை மீது வீசினர். இதையடுத்து யானையின் தலையில் தீப்பிடித்ததால் அலறி ஓடியுள்ளது. இந்நிலையில் காது கிழிந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 5 வனத்துறையினர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.