பிஎஸ்சி நர்சிங் முடித்தவர்களுக்கு மாதம் 2.5 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாங்கித் தருகிறது.
பி.எஸ்.சி நர்சிங் முடித்து ஆங்கில திறன் அறியும் தேர்வான IELTS அல்லது OET போன்றவற்றில் 7 பேன்ட் அல்லது பி, சி கிரேடு வைத்துள்ளவர்களுக்கு அயர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளில் 2 முதல் 2.5 லட்சம் மாத சம்பளத்தில் தமிழக அரசே வேலை வாங்கி தருகிறது.
அயலக வேலைவாய்ப்பு நிறுவனம் என்ற நிறுவனத்தை தமிழக அரசு நடத்தி வருகிறது. கிண்டியிலுள்ள இந்நிறுவனம் மூலம் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். டிப்ளமோ, பொறியியல், நர்சிங், துணை மருத்துவ படிப்புகள், எம்.பி.பி.எஸ்., பிட்டர், வெல்டர் போன்றவற்றில் ஐ.டி.ஐ., முடித்தவர்களை இவர்கள் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது நர்சிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது. பிரிட்டன் அரசே 100 நர்சுகளை தங்கள் நாட்டு அரசு மருத்துவமனைகளுக்காக எடுக்கிறது. அவர்களுக்கான ஊதியம் 2.5 லட்சம் வரை. அதே போல் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் வேலை பார்க்க 20 நர்சுகளை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இது தவிர கத்தார் தலைநகர் தோஹாவில் வேலை பார்க்கவும் நர்சுகள் தேவை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கத்தார் பணிக்கு ரூ.70 ஆயிரம் வரை சம்பளம். அதற்கென கத்தார் டேட்டா ப்ளோ அல்லது கத்தார் புரோமெட்ரிக் முடித்திருக்க வேண்டும். இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜன., 31 ஆகும். மேலும் விவரங்களுக்கு https://www.omcmanpower.com/currentopenings.php தொடர்பு எண்: 044- 22505886.