Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையா…? அப்ப இதை செய்யுங்கள்…. கண்டிப்பா கிடைக்கும்…!!

கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக எல்பிஜி சமையல் சிலிண்டர் இருக்கிறது. கேஸ் சிலிண்டர் வாங்க பிரதான் மந்திரி திட்டத்தில் அரசு மானியம் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத் தொகையானது மக்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. இருப்பினும் இந்த மானியத்தை பெற வேண்டுமெனில் சிலிண்டர் இணைப்பு கணக்குடன் ஆதார் அட்டை இணைக்கப்படவேண்டும். அப்படி செய்திருந்தால் மட்டுமே அரசு மானியம் வழங்கப்படும். ஆதார் இணைக்கப்படாத சிலிண்டருக்கு மானியம் கிடைக்காது. எனினும் ஆதார் கார்டு இணைக்காதவர்களுக்கு நேரடி மானியம் எளிதாக பெற ஒரு வழி இருக்கிறது. அது என்னவென்று பார்க்கலாம்.

1.பக்கத்தில் இருக்கும் சிலிண்டர் ஏஜென்சிக்கு சென்று வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பியுங்கள்.

2.பின்னர் வங்கி கணக்கு எண், பயனாளியின் பெயர், வங்கியின் IFSC Code, 17 இலக்க சிலிண்டர் வாடிக்கையாளர் ஐடி ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

3.இந்த தகவல்களை எல்லாம் சிலிண்டர் விநியோகஸ்தரிடம் சமர்ப்பித்து விட்டால் உங்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக சிலிண்டர் மானியம் வந்துவிடும்.

4.இனி உங்களுக்கு எவ்வளவு மானியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகின்றது என்பதை எளிதில் பார்த்து விட முடியும்.

5.மேலும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலமாக மானியம் தொடர்பான தகவல்களை அவ்வப்போது தெரிந்து கொள்ள முடியும்.

Categories

Tech |