Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சளி, ஜலதோஷம் இருந்ததாக கூறி…. ஊசி போட்ட சிறிது நேரத்தில்…. புதுமாப்பிள்ளை உயிரிழந்ததால் அதிர்ச்சி…!!

திருமணமாகி 40 நாட்களில் புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஜீவா நகர் பகுதியில் வசிப்பவர் முனியாண்டி மகன் முகேஷ் (23). கூலி தொழிலாளியான இவருடைய மனைவி பூபால். இவர்களுக்கு திருமணமாகி 40 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் முகேஷ் தன்னுடைய நண்பருடன் பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சளி மற்றும் ஜலதோஷம் இருப்பதாக கூறி அவருக்கு கையில் நரம்பு போட்டுள்ளனர்.  இதையடுத்து சிறிது நேரத்தில் முகேஷ் வாந்தி எடுத்துள்ளார்.

அப்போது செவிலியர் அவரது இடுப்பில் மேலும் ஒரு ஊசி போட்டுள்ளனர். இந்நிலையில்   மருத்துவமனையை விட்டு வெளியே வந்து சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவரை ஆம்புலன்ஸ் மூலமாக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முகேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 40 நாட்களில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |