Categories
சினிமா

“மங்காத்தாவை போல் அமையும் நேர்கொண்ட பார்வை “மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!!

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கான டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட பணிகள் அதிவேகத்துடன் நடைபெற்று வருகிறது.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படமானது ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினரால்  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது இருந்த போதிலும் அதற்கு முன்பாக ஆகஸ்ட் 1ஆம் தேதி படம் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில் படத்திற்கான தொழில்நுட்ப பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

Image result for nerkonda paarvai

மேலும் அஜித்  உட்பட அனைத்து கதாபாத்திரங்களின் டப்பிங் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் அடுத்தகட்ட பணியை நோக்கி திரைப்படக்குழு நகர்ந்துள்ளது.இதனைத்தொடர்ந்து படத்திற்கான பின்னணி இசையை இயக்குவதற்கான பணியில் முழு கவனம் செலுத்துகிறார் திரைப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

மேலும்  இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக தெரிவித்துள்ளார். பில்லா ,மங்காத்தா போன்ற படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசை மிகப்பெரிய பலத்தைக் கொடுத்தது போல் இந்தப் படத்திற்கும் மிகப்பெரிய பலத்தை அவரது இசை கொடுக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |