தமிழகத்தில் பிப்ரவரி மாதம் வரலாறு காணாத கனமழை பெய்யும் என்று வெதர்மேன் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எப்போது தமிழகத்தில் மழை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் பிப்ரவரி மாதம் தமிழகத்தில் வரலாறு காணாத கனமழை பெய்யும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரி மாதம் வரலாறு காணாத மழையை எதிர்கொண்டது தமிழகம்.
இதேபோல் பிப்ரவரி மாதமும் இதுவரை இல்லாத வகையில் அதிக மழை இருக்கும். கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பயிர்கள் சேதம் அடைந்தன. அந்த வகையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதீத கனமழை இருக்கும் என பிரதீப் ஜான் கூறியுள்ளார். “நடப்பாண்டு பிப்ரவரியில் 100 மி.மீ. மழைக்கு வாய்ப்புள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.