Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னது.. பஞ்சர் ஆகாதா…! செயினும் இல்லையா…! சென்னை மக்கள் கொண்டாட்டம்…!

சென்னையில் இ-சைக்கிள்கள் மற்றும் பஞ்சர் ஆகாத சைக்கிள்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்மார்ட் பைக் மொபிலிட்டி நிறுவனத்துடன் சென்னை மாநகராட்சி, ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் இணைந்து மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சைக்கிள் நிலையங்களை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதில் தற்போது செயின்கள் இல்லாத, பஞ்சர் ஆகாத சைக்கிள்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 500 நியூ ஜெனரேஷன் சைக்கிள்களும், 500 சைக்கிள்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

இந்த சைக்கிள்களை சோதனை செய்வதற்காக சென்னை மெரினா கடற்கரை, நந்தம்பக்கம் மெட்ரோ, உள்ளிட்ட பகுதிகளில் 22 ஆம் தேதி முதல் 32 நியூ ஜெனரேஷன் சைக்கிள்களும், 32 சைக்கிள்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு கட்டணமாக நியூ ஜெனரேஷன் சைக்கிள் ஓட்டுவதற்கும் ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாயும்,அதற்கு மேல் ஒட்டினால் அரை மணி நேரத்துக்கு 9 ரூபாயும் வசூலிக்கப்படும்.மேலும்   இ-சைக்கிள்களுக்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |