Categories
தேசிய செய்திகள்

ரூபாய் 859க்கு விமானத்தில் பறக்கலாம்…. உடனே முந்துங்கள்..!!

குடியரசு தினத்தை முன்னிட்டு உள்நாட்டு விமான பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை கோஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.

கோஏர் நி றுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு ரூ.859 கட்டணத்தில் உள்நாட்டு விமான பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஜனவரி 22 முதல் 29-ஆம் தேதி வரையில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்று அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தில் முன்பதிவு செய்பவர்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையில் எப்போது வேண்டுமானாலும் இதை பயன்படுத்தலாம். ஒரு வழிப் பயணத்திற்கு மட்டும் இதில் அனுமதி உண்டு என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த அதிரடி திட்டம் விமானப் பயணிகளிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |