Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டமன்ற தேர்தல் முடிவு செய்ய… பிப்-20 & 21 தேதிகளில்…. தேர்தல் ஆணைய கூட்டம்…!!

தமிழக சட்டமன்ற தேர்தலை முடிவு செய்ய பிப்ரவரி-20 மற்றும் 21 ஆம் தேதிகளில் தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக பிப்ரவரி 20 மற்றும் 21 ஆம் தேதி தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்துவார்கள் என்பது குறித்தும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மத்திய உள்துறை செயலாளர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்ட மன்ற தேர்தல் எப்போது நடத்தலாம் என்று ஆலோசித்ததாக கூறப்படுகின்றது. இம்முறை கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி கடைசி வாரத்தில் தேர்தல் தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மே 5 க்குள் தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Categories

Tech |