பணம் வைத்து சூதாட்டம் ஆடிய மூன்று பேரை பேரையூர் அருகே போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேரையூர் பகுதியை சார்ந்த சுப்புராம், ஆனந்தன், வேல்முருகன் ஆகியோர் அந்தப் பகுதியில் இருக்கும் மந்தை அருகே பணத்தை வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
இதனை கண்காணித்த காவல்துறையினர் அவர்களை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரொக்கப்பணம் 530 ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.