Categories
கல்வி மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு கட்டாயம்”… அண்ணா பல்கலை அறிவிப்பு..!!

“ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.” என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மணி நேரம் ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பங்கேற்க இயலாமல் போனால், நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும். லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், கணினியில் தேர்வு எழுதலாம். 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அது 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |