பொதுவாக நம்முடைய முன்னோர் காலத்தில் சளி, இருமல், ஜலதோஷம் ஆகியவை ஏற்படும்போது மூலிகைகளைக் கொண்டு அதனை ஆவிபிடிக்க சொல்வார்கள். அவ்வாறு செய்தால் நம்மிடம் உள்ள தொற்று விரைவில் குணமடையும். ஆனால் தற்போதுதான் எதற்கு எடுத்தாலும் மருத்துவமனை, மருந்துகள் என்று அதை நாடி செல்கிறோம். தற்போது மூலிகைகளைக் கொண்டு ஆவி பிடிப்பதை பற்றி பார்ப்போம்.
நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்டோர் பாதிப்பு தீரும் வரை தினமும் ஆடாதொடை, நொச்சி, வேப்ப இலை, தழுதாழை ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து அதனை ஆவியாக பிடிக்க வேண்டும். இந்த மூலிகையானது சுவாசப் பாதையில் உள்ள நோய்த் தொற்றுக் கிருமிகளை அழிக்க உதவுகிறது. சுவாச மண்டலத்தையும், நுரையீரலையும் மிகவும் எளிதாக இயக்க இது உதவுகிறது.