வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
வெங்காயம் நம்முடைய அன்றாட உணவில் முக்கியமான ஒரு பொருளாக இருக்கிறது. வெங்காயம் அனைத்து உணவுப் பொருட்களிலும் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்த வெங்காயத்தை நாம் சமைத்து மட்டுமே உண்பது உண்டு. ஆனால் பச்சையாக சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.
பச்சை வெங்காயத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
இதில் உள்ள சல்பர் சத்து ரத்தத்தை சுத்தம் செய்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.
அலர்ஜியை எதிர்க்கும் தன்மை கொண்டது.
சுவாசக் குழாயை சுத்தப்படுத்தி ஆஸ்துமா பிரச்சினை வராமல் காக்கிறது.
தினமும் உணவில் சேர்த்தால் இரும்புச்சத்து குறைபாடு, ரத்த சோகையை தவிர்க்கலாம்.