கோவையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: ” கோவையில் விரைவில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும். அதன்பின் வெளிநாட்டுக்கு இணையாக வர்த்தகம் நடக்கும். தூய்மை மிக்க நகரமாக, வேலைவாய்ப்பு மிக்க நகரமாக, தென் இந்தியாவிலேயே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய நகரமாக கோவை திகழும். கோவையில் ராணுவ தளவாட உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். என்று கோவை மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். வேறு என்ன வேண்டும்?