குழந்தைகள் பராமரிப்பு என்பது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக கவனமாக பார்த்து செய்ய வேண்டும். அதுவும் குழந்தைகளுக்கு நகங்கள் வெட்டுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் குழந்தைகள் கைகளை நகம் வெட்டுவதற்கு அனுமதிக்கமாட்டார்கள். பெரும்பாலும் அவர்கள் தூங்கிய பின்பு நகங்களை வெட்ட வேண்டும். குழந்தைகள் குளித்த பிறகு நகங்கள் சாஃப்டாக இருக்கும், அப்போது டிரிம்மரை வைத்து தேய்கலாம். குழந்தை தூங்கும் போது நகம் வெட்டினால்நல்லது.
தூங்கவில்லை என்றால் குழந்தைகளின் கவனத்தை பொருட்கள் மீது காட்டி அவர்களின் கவனத்தைத் திருப்பிய பின்னர் நகத்தை வெட்ட வேண்டும். தப்பித் தவறி கூட குழந்தையின் நகத்தை விடுகிறேன் என்று சதைப்பகுதியை காயப்படுத்தி விடாதீர்கள். கொஞ்சம் இடைவெளிவிட்டு நகத்தை வெட்டுவது நல்லது. நகம் வெட்டினால் அந்த இடம் கூர்மையாக இருக்கும். ஆடைநூலில் குழந்தையின் சிறு விரல்கள் நகங்கள் சிக்கலாம்.எனவே, நைல் ஃபைலரால் மென்மையாகத் தேய்த்துவிடுங்கள். சில குழந்தைகள் அதீத சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.