அதிமுகவினருக்கு ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடம் தான் கோவில் என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினர் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம், இஸ்லாமியர்களுக்கு மெக்கா போல அதிமுகவினருக்கு ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டாலின் ஒருநாளும் முதல்வராக முடியாது, தேர்தல் வந்துவிட்டால் அவர் வேல் வாங்குவது மட்டுமல்ல வேல் குத்தவும் செய்வார் என்று விமர்சனம் கூறியுள்ளார்.