Categories
தேசிய செய்திகள்

புதுவகை மர்ம நோய்… அரிசியில் பூச்சுகொல்லி மருந்து… அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு….!!

ஆந்திராவில் புதிதாக தாக்கியுள்ள நோய்க்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர பிரதேச மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலுரு என்ற பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் அப்பகுதியில் வசித்து வரும் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் முதியவர் முதல் குழந்தைகள் வரை என மொத்தம் 615 பேருக்கு தலை சுற்றல், வாந்தி, நடுக்கம், மயக்கம், குமட்டல், கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் மட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நோயானது அரிசியில் கலந்த பூச்சிக்கொல்லி மருந்தால் ஏற்பட்டுள்ளது என மர்ம நோய் குறித்து ஆய்வு செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நோய் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குமார் பள்ளி என்ற கிராமத்தில் தற்போது 22 பேருக்கு மர்ம நோய் தாக்கியுள்ளது. ஏற்கனவே நடந்தது போல சிலருக்கு மயக்கம், தலை சுற்றல், வாந்தி போன்ற அறிகுறிகள் தெரிந்தன, இந்த மர்ம நோயின் காரணமாக பாதிக்கப்பட்ட 22 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர், இதுபற்றி தகவல் அறிந்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்த அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |