Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் நடந்த விபரீதம்… துக்க நிகழ்ச்சிக்கு சென்றவருக்கு நடந்த துயரம்… வசமாக சிக்கியவர்கள்….. !!

ரவுடியை கொலை செய்த வழக்கில் போலீசார் ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணதாசன் நகரில் சூரியபிரகாஷ் என்ற ரவுடி வசித்து வந்தார். இவர் பூமாலை கடை ஒன்றை பழைய வண்ணார்பேட்டை பகுதியில் வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் தனது அண்ணன் ஜெயக்குமார் என்பவருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வண்ணார்பேட்டைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த  மர்மநபர்கள் சூரியபிரகாஷை ஓட ஓட வெட்டி கொலை செய்துவிட்டனர். அதோடு அவரது அண்ணன் ஜெயக்குமாரையும் மர்ம நபர்கள் தாக்கியதால் அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்பின் போலீசார் இச்சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், பிரபல ரவுடி பாட்டில் மணி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முன்விரோதம் காரணமாக சூரியபிரகாஷ் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரித்து வந்த தண்டையார்பேட்டை போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் சதாம் உசேன், ஐயப்பன், பப்லு என்ற கணேஷ் மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் வசித்து வரும் தினேஷ், கவுண்டம் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். அதோடு இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பாட்டில் மணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |