Categories
லைப் ஸ்டைல்

மக்களே எச்சரிக்கை…! ”தூக்கி தூரமா போடுங்க”…. வீட்டில் பணம் சேராது… !!

நாம் நம் வீட்டில் வாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பொருட்களை எந்த இடத்தில வைக்க வேண்டும், வைக்க கூடாது என்று அறிந்து கொள்ளலாம்.

சிலருடைய வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் பணம் சேராது. அதற்கு காரணம் அவர்களின் வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சினையாகும். வீட்டில் வைக்கும் சில பொருட்கள் உங்களின் பல பிரச்சனைகளைத் தீர்க்கும். உங்கள் வீட்டிற்கு எது நல்ல வாஸ்துவை கொடுக்கும், எந்தெந்த பொருட்கள் தீய வஸ்துவை கொண்டு வரும் என்று பார்க்கலாம்.

வைக்கக் கூடாத பொருட்கள்:

துடைப்பம் :

வீட்டின் படிக்கட்டுக்கு அடியில் ஒரு போதும் துடைப்பம் மற்றும் ஷூ போன்றவற்றை வைக்கக்கூடாது. இவ்வாறு வைப்பதன் மூலம் வீட்டின் வாஸ்து கெடுவதுடன் உங்கள் வீட்டில் வறுமை அதிகரிக்கும்.

அதிக வெளிச்சம் :

சாஸ்திரத்தின்படி உங்கள் கடையில் கூர்மையான விளக்குகளை பயன்படுத்தினால் கடைகளில் ஒப்பந்தங்களில் விரைவில் முடியும். வீட்டில் இது போன்ற அதிக வெளிச்சத்தை நிறுவுவதை தவிர்க்க வேண்டும்.

நல்ல வாஸ்து கொடுக்கும் பொருட்கள்:

அனுமன் சிலை:

பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட அனுமன் சிலையை வீட்டின் தென்மேற்கு திசையில் வைத்து  தினமும் வழிபட்டால் உங்கள் வாழ்வில் இருக்கும் அனைத்து தடைகளும் நீங்கும்.

லட்சுமி குபேரர் படம்:

உங்கள் வீட்டின் நுழைவாயிலில் லட்சுமி மற்றும் குபேரன் இருக்கும் படத்தை மாட்டி வைத்தால்  பணத்திற்கு பாதுகாப்பையும், மேலும் வீட்டில் உள்ள பணம் வெளியே செல்லாமல் தடுக்கும்.

வாஸ்து கடவுள்:

உங்கள் வீட்டில் வாஸ்து கடவுள் சிலையை அல்லது உருவப்படத்தை வைத்து வழிபடுவதால் வீட்டின் அனைத்து தோஷங்களையும் நீக்கும். உங்கள் வீட்டின் தீய விளைவுகளை அகற்றி பண நெருக்கடியை தீர்க்கும்.

மண்பானை:

உங்கள் வீட்டின் வடக்கு மூலையில் மண்ணால் செய்யப்பட்ட பானையில் தண்ணீர் நிரப்பி வைத்தால், நீங்கள் சம்பாதிக்கும் பணம் வீட்டிலேயே தங்கும். இந்த பாதை எப்பொழுதும் நிரம்பி இருக்கும்படி பார்த்து கொள்ளவும். மேலும் இது எப்போதும் மூடி இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்.

பிரமிடுகள்:

வீட்டில் அனைவரும் அதிக நேரம் இருக்கும் இடத்தில்வெள்ளி அல்லது செம்பால் செய்யப்பட்ட பிரமிடை வைத்தால் வைத்திருந்தால், உங்கள் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிலவும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

Categories

Tech |