Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“சிறுவர்களுக்கும் பாதுகாப்பில்லை” சிறுவனின் ஆசனவாயில் வீக்கம்…. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய கொடூரம்…!!

3ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் 4 சிறுவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கக ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் வசித்து வரும் மூன்றாம் வகுப்பு சிறுவனுக்கு திடீரென்று இயற்கை உபாதை கழிக்கும் இடத்தில் வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அது குறித்து சிறுவன் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறுவனின் ஆசன வாய்ப்பகுதியில் வீங்கி இருந்துள்ளளது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுவனை அங்கிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுவனை யாரோ ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரித்ததில் அந்த பகுதியில் உள்ள நான்கு சிறுவர்கள் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த 4 சிறுவர்களையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். விசாரணையில் ஆபாச படங்களை பார்த்துவிட்டு சிறுவனை துன்புறுத்தியுள்ள்ளனர்.  இந்த 4 சிறுவர்களும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கும் தற்போது பாதுகாப்பு இல்லை என்ற சூழல் தமிழகத்தில் உருவாகி வரும் நிலையில், சிறுவர்களுக்கும் பாதுகாப்பில்லை என்று பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |