Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துடிக்க துடிக்க நாயை அடித்துக் கொல்லும் அரக்கன்… கொடூர வீடியோ…!!!

செல்லூர் பகுதியில் தெருநாயை கட்டையால் அடித்து துடிதுடிக்க கொன்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை செல்லூர் சிவகாமி தெரு பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவர் தெரு நாய் ஒன்றினை மனிதத்தன்மையற்ற வகையில் ஈவு இரக்கமின்றி உருட்டுக்கட்டையால் தலைப்பகுதியிலேயே பலமுறை கொடூர தாக்கி உயிரை பறித்ததோடு, பிளாஸ்டிக் பையில் துடிதுடித்த நாயை கட்டி தூக்கிச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வந்தது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வடக்கு வட்ட கிராம அலுவலர் முத்துமொழி செல்லூர் காவல்நிலையத்தில் கொடூரமான முறையில் நாயை கட்டையால் அடாத்துக்கொன்ற விமல்ராஜ் மீது விலங்குகள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அளித்த புகாரின் பேரில் செல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |