Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ATMல பணம் எடுத்து தாங்க…! நம்பி கெஞ்சிய விவசாயி… பிறகு நடந்த அதிர்ச்சி….!!

காஞ்சிபுரத்தில் விவசாயியை ஏமாற்றி ஏடிஎம் கார்டிலிருந்து  40,000 ரூபாய் பணத்தை எடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் விவசாயியாக உள்ளார். சந்திரன் கடந்த 16ம் தேதி பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த நபரிடம் பணத்தை எடுத்து தருமாறு கூறி தனது ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் பணம் எடுப்பது போல் நாடகமாடி விட்டு பணம் வரவில்லை என்று கூறி போலி ஏடிஎம் கார்டை சந்திரனிடம் கொடுத்துள்ளார்.

வீட்டிற்கு சென்ற சந்திரனுக்கு அவரது வங்கி கணக்கில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது என்று  செல்போனில் தகவல் வந்துள்ளது. இதனால் அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஏகாம்பரநாதர் சன்னதி தெரு அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபரின் பெயர் ஏழுமலை என்பதும் அவர் சந்திரனின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி நாற்பதாயிரம் ரூபாய் எடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 11 ஏடிஎம் அட்டைகள் 35,500 ரூபாய்  ரொக்கம் மற்றும்  இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர்  ஏழுமலையை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |