பிஎஸ்என்எல் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி வேலிடிட்டி பேக்கை அறிமுகம் செய்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் செல்போன் என்பது அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசும் உறவாடும் காலம் ஓடிப்போய் தற்போது செல்போன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அவ்வாறு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வருகிறது. செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,999 மற்றும் ரூ.2,399 ஆகிய இரண்டு நீண்ட வேலிடிட்டி பேக்கை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரூ.1999- அன்லிமிடெட் அடைப்புகள், தினமும் 3 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 386 நாட்களுக்கு வழங்கப்படும். மேலும் ரூ.2,399-க்கு அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 3 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 437 நாட் களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.