பெண்கள் ஆடை அணிந்திருக்கும் போது மார்பகங்களைத் தொட்டாலோ, தடவினாலோ அது பாலியல் வன்முறை ஆகாது என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நம் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.
இந்நிலையில் ஆடை அணிந்திருக்கும் போது பெண்களின் மார்பகங்களை தொட்டாலோ, தடவினாலோ அது பாலியல் வன்முறை ஆகாது என மும்பை உயர்நீதிமன்றம் நாகூர் கிளை தீர்ப்பளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் 39 வயது நபர் 12 வயது சிறுமியின் ஆடையை அகற்ற முயன்று, சிறுமியின் மார்பகங்களை அழுத்தி உள்ளார். இந்த வழக்கில் இது பாலியல் குற்றம் இல்லை எனக்கூறி குற்றவாளிக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை ஓராண்டாக குறைக்கப்பட்டு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.