Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மே 5-க்குள் தேர்தல்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலை மே மாதம் 5ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலை மே மாதம் 5ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப்ரவரி 20 அல்லது 21 ஆம் தேதியில் தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. பெரும்பாலும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Categories

Tech |