மல்லியப்பூ என்பது நாம் அனைவரும் தலையில் சூடிக் கொள்வதற்கு மட்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாது. அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படும். இந்த புழுக்கள் அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்க வைத்து அதனை வடி கட்டி அருந்தி வந்தால் குடல் புழுக்கள் நீங்கும்.
அஜீரண கோளாறு ஏற்படும் வயிற்று புண், வாய்ப்புண் ஆகியவற்றிற்கு மல்லிகைப் பூ சிறந்த மருந்து.
பிரசவத்தில் ஏற்படும் பிரச்சினையினால் தாய்பால் கொடுக்க முடியாமல் மார்பில் பால் சுரந்து கட்டிகள் ஏற்பட்டு வலி ஏற்படும். இந்த சமயத்தில் மல்லிகைப் பூக்களை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டு விட்டால் வலி குறையும். பால் சுரப்பது நிற்கும்.
மார்பகத்தில் தோன்றும் நீர்கட்டிகள் குணமடையவும் மளிகை பற்று போடலாம்.மல்லிகைப்பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி சளியினால் ஏற்படும் மூக்கடைப்பு, இருமல் போன்ற தொந்தரவு நீங்கும்.
மல்லிகை மொட்டுக்களை புண்கள், காயம்பட்ட இடங்களில் கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றில் அரைத்துப் பூசினால் உடனே குணமடையும்.