Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்… ஜனவரி 29 முதல்… புதிய கோணத்தில் பிரசாரம்…!!!

தமிழகத்தில் ஜனவரி 29-ஆம் தேதி முதல் புதிய கோணத்தில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஜனவரி 29ஆம் தேதி முதல் புதிய கோணத்தில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விடியலை நோக்கி மக்கள் கிராம சபையை தொடர்ந்து ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’என்ற பரப்புரையை வருகின்ற 29ஆம் தேதி முதல் திருவண்ணாமலையிலிருந்து தொடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |