Categories
உலக செய்திகள்

Shocking News: தடுப்பூசி மூலமும் தொற்று பரவும்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மூலமாகவும் நோய் தொற்று வரலாம் என பிரிட்டன் மருத்துவத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போதைய உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மூலமாகவும் நோய்த்தொற்று மற்றவர்களுக்கு பரவலாம் என பிரிட்டன் மருத்துவத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் தடுப்பூசி திட்டம் செயல் படுத்தப்பட்டாலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |