முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ சிலை திறப்புக்கு மாணவிகள் அனைவரும் புடவை அணிந்து தான் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ சிலை திறப்புக்கு வரும் மாணவிகள் அனைவரும் புடவை அணிந்து வர வேண்டும் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 28 ஆம் தேதி சென்னை லேடி வெலிங்டன் சீமாட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெறும் திறப்பு விழாவுக்கு லேடி வெலிங்டன், ராணி மேரி மற்றும் மாநில கல்லூரி மாணவிகள் கட்டாயம் புடவையில் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.