Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்க பிரச்சனைக்கு 100 நாட்களில் தீர்வு… ஸ்டாலின் அதிரடி வாக்குறுதி…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்களின் பிரச்சினைகளுக்கு 100 நாட்களில் தீர்ப்பளிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சியும் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகிறது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்தால் போர்கால அடிப்படையில் மக்கள் பிரச்சனைகளுக்கு 100 நாட்களில் தீர்ப்பு அளிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். மக்கள் பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை நானே சேகரித்து சீழ் வைத்து மக்களுக்கு ரசீது வழங்குவேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் www.stalinani.com, என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9171091710 என்ற எண்ணிலோ மக்கள் புகார் அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |