குழந்தையின்மை, மனசோர்வு உட்பட பல வியாதிகள் போக்கும் அற்புத மலர் பற்றி தெரிந்து கொள்வோம்.
சங்கு பூ எனப்படும் காக்கட்டான் மலரை நாம் வெளிபுறங்களில், தோட்டங்களில் பார்த்திருப்போம்.கண்கவர் நீலநிறத்தில் பூக்கும் கண்களுக்கு மட்டுமல்ல நம் மனதிற்கும் குளிர்ச்சித்தரக்கூடியது.இது வெள்ளை காக்கட்டான், நீல காக்கட்டான், அடுக்கு காக்கட்டான் என்று மூன்று வகையாக வளர்கிறது.
வெள்ளை காக்கட்டான் மலர் சிவனுக்கு விருப்பமான மலர்களில் ஒன்றாகும். இதன் வேரிலிருந்து விதைகள் வரை இந்த தாவரம் முழுவதும் பல மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளன. இலையை மஞ்சளுடன் சேர்த்து பயன்படுத்தினால் கட்டி, வீக்கம் கரையும், வேருடன் மிளகு சேர்த்து கொதிக்க வைத்து காசாயம் செய்து கொடுத்தால் சளி கோழை நீங்கும்.
ஆனால் இவற்றை பக்குவத்துடன் பயன்படுத்த வேண்டியுள்ளதால் உட்கொள்ளும் முன்னர் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியமாகும். பெண் உறுப்பு பொல் மலரும் இம்மலர் பெண்களின் கர்ப்பபை தொடர்பான மாதவிடாய் சிக்கல்கள், குழந்தையின்மை சிக்கல்கள், சிறுநீர் தொற்றுகளை சரிசெய்யக்கூடியது.
இம்மலர்கள் மனசோர்வு, மனக்கவலை, உடலில் தோன்றும் அமிலதன்மை ஆகியவற்றை நீக்க வல்லது. சங்குபூவில் ஆண்டி ஆக்சிடன்ட் நிறைந்துள்ளதால் இது நம் உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமடைவதை பெருமளவு தடுத்து நம்மை ஆரோக்கியத்துடன் இருக்க செய்கிறது.நம் சருமத்தை இளமையுடன் தோன்றவும் உதவுகிறது.
மூச்சு திணறல், இருதய சம்பந்தமான நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.தாய்லாந்து, சீனா உன்பட பல ஆசிய நாடுகளில் நட்சத்திர உணவகங்களில், ராயல் உணவகங்களில் பரிமாறப்படும் உணவுகளில் இந்த மலர் சேர்க்கப்படுகிறது.