Categories
சென்னை மாநில செய்திகள்

“மக்களை வாட்டி வதைக்கும் தண்ணீர் பஞ்சம் “தமிழக அரசுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் ..!!

தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் தண்ணீர் பஞ்சத்தை சென்னை தற்போது சந்தித்து வருகிறது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக மக்கள் தொகையானது இருந்துவருகிறது ஆகையால் சென்னையில்  நாள் ஒன்றுக்கு 850 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது ஆனால் தற்போது அது குறைந்து வெறும் 525 லிட்டர் தண்ணீர் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Image result for water scarcity

இது சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் விதமாக கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் மூலம் நாளொன்றுக்கு 750 மில்லி லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும் 900 தண்ணீர் லாரிகள் மூலம் நாளொன்றுக்கு 9,500 மில்லி லிட்டர் தண்ணீரும் மேலும் ரயில் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வருவதற்கு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துவருகிறது.

Image result for water scarcity

கடந்த 2017ஆம் ஆண்டு பருவமழை பொய்த்ததன் காரணமாக சென்னைக்கு அத்தியாவசிய தண்ணீரை வழங்க கூடிய செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட மூன்று ஏரிகள் வறண்டு போனதால் தான் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Image result for chennai high court

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் நீர் மேலாண்மை சரிவர  பராமரிக்காததன் காரணமாகவே தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தண்ணீர் பஞ்சத்தை இனிவரும் காலங்களில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |