அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து மாணவர்களுடன் துணைவேந்தர் தலைமையிலான குழு நடத்திய பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து மாணவர்களின் போராட்டம் 47 வது நாளாக இன்னும் தொடர்கிறது. இந்நிலையில் விடுதிகளில் மாணவர்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம் போன்றவை துண்டிக்கப்பட்ட பின்னரும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையடுத்து மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.