உடல் எடையை குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
பெரும்பாலானவர்கள் உடல் எடை பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு சிகிச்சைகளை கூட மேற்கொண்டு வருகின்றனர். இந்த உடல் எடை வேகமாக குறைய விரதம் முக்கியம். அதாவது உடல் மற்றும் செரிமான உறுப்புகளுக்கு ஓய்வளிப்பது மிக முக்கியம். ஒரு நாளைக்கு 16 – 18 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.
இந்த விரதத்தின்போது தண்ணீர் மட்டும் குடிக்கலாம். இது கொழுப்புகளை கரைத்து நாம் உணவு உண்ணும் முறையை நமக்கே உணர்த்துகிறது. இந்த விரதம் தொடர்ச்சியாக இல்லாமல் சீராக இருக்கவேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.