Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒழுங்கா வாபஸ் வாங்கிடுங்க… இல்லைனா நாங்க வாங்க வைப்போம்… திமுக செயலாளர் அதிரடி…!

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராடிய சிறுபான்மை மக்கள் மீது வழக்கு செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்று திருப்பூர் மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, திருப்பூரில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்களை திமுகவினர் சந்தித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் அதிமுகவை நிராகரிப்போம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் திமுகவே ஆட்சியை அமைக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சிறுபான்மை மக்கள் மீது தற்போது வழக்கு தொடர்ந்து இருப்பது கண்டனத்துக்குரியதாகும். காவல்துறையினர் இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மீறினால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வழக்குகள் திரும்பப் பெறப்படும். இதனை திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

Categories

Tech |