Categories
தேசிய செய்திகள்

“அற்புதம் நடக்கும்” பெற்ற பிள்ளைகளை…. நிர்வாணமாக நிற்க வைத்து…. பெற்றோர் செய்த கொடூரச்செயல்…!!

பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை நிர்வாணமாக கொலை செய்து நரபலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் புருஷோத்தம நாயுடு – பத்மஜா. புருஷோத்தம நாயுடு அங்குள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராகவும், அவருடைய மனைவி தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு அலேக்யா(24), சாயி திவ்யா(22) என்று இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா காலம் என்பதால் அவர்கள் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக புருஷோத்தமன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் வீட்டில் பூஜைகள் செய்வதால் அற்புதங்கள் நடக்கும் என்று கூறி வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் தனது இரண்டு மகள்களையும் நிர்வாண நிலையில் வைத்து அடித்து கொலை செய்துள்ளனர். இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தம்பதியினரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில் அதில் தங்களுடைய மகளை சித்திரவதை செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த விசாரணையின் போது, அற்புதங்கள் நிகழும் எனவும், ஒரு நாள் இரவு மட்டும் காத்திருங்கள் எங்களுடைய மகள்கள் மீண்டும் உயிருடன் வருவார்கள் என்றும் அவர்கள் காவல்துறையினரிடன் வாக்குவாதம் செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் பூஜைக்கான காரணம் என்ன? மகள்களை பெற்றோர்களே கொலை செய்தது ஏன்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நல்ல முறையில் படித்து வேலையில் இருக்கும் பெற்றோர்களே தங்கள் மகள்களை அடித்து நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |