Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா”…. அதிமுகவிற்கு துரோகம் செய்யமாட்டார் – இல. கணேசன்…!!

சசிகலா அதிமுகவிற்கு துரோகம் செய்யமாட்டார் என்று பாஜக மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் விடுதலையானதும் அதிமுக இரண்டாக உடையும் என்றும், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் இல கணேசன் கூறுகையில், “சசிகலா சிறையில் இருந்து வருவதை சிங்கம், புலி வருவதுபோல சித்தரிக்கிறார்கள் என்றும், அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை” எனவும் கூறியுள்ளார். மேலும் சசிகலா அவர்கள் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி என்பதால் அவர் அதிமுகவிற்கு துரோகம் செய்ய மாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |