இன்றைய தின நிகழ்வுகள்
1500 – எசுப்பானிய நாடுகாண் பயணி விசென்டே பின்சோன் பிரேசிலில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்றார்.
1531 – போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1564 – ஊலா நகரப் போரில் லித்துவேனியா உருசியாவை வென்றது.
1564 – இத்தாலியின் கத்தோலிக்க டிரெண்ட் பேரவை கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை ஆகியவற்றிற்கிடையேயான அதிகாரபூர்வமான வேறுபாட்டை வரையறுத்தது.
1565 – விஜயநகரப் பேரரசுக்கும் இசுலாமிய தக்காண சுல்தான்களுக்கும் இடையே இடம்பெற்ற தலைக்கோட்டை சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும் பகுதி இசுலாமியரின் கட்டுப்பாட்டுக்குள் வரக் காரணியாய் இருந்தது.
1700 – வட அமெரிக்காவின் மேற்குக் கரையில் 8.7–9.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
1788 – ஆர்தர் பிலிப் தலைமையில் பிரித்தானியக் கைதிகளின் முதலாவது தொகுதியைக் கொண்ட கப்பல் சிட்னியை அடைந்து புதிய குடியேற்றத்தை ஆரம்பித்தனர். இது ஆஸ்திரேலிய நாளாகக் கொண்டாடப்படுகின்றது.
1837 – மிச்சிகன் அமெரிக்காவின் 26-வது மாநிலமாக இணைந்தது.
1838 – அமெரிக்காவில் டென்னிசி முதலாவது மாநிலமாக மதுவிலக்கை அமுல் படுத்தியது.
1841 – ஐக்கிய இராச்சியம் ஆங்காங்கை அதிகாரபூர்வமாக ஆக்கிரமித்தது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது.
1905 – 3,106.75 கரட் (0.621350 கிகி) எடையுள்ள கலினன் என்ற உலகின் மிகப்பெரிய வைரம் தென்னாப்பிரிக்கா, பிரிட்டோரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
1924 – சென் பீட்டர்ஸ்பேர்க் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1926 – ஜான் லோகி பைர்டு முதலாவது தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்சிப்படுத்தினார்.
1930 – இந்திய தேசியக் காங்கிரஸ் 26 சனவரியை இந்தியாவின் விடுதலை நாளாக (பூரண சுயராஜ்ய நாளாக) அறிவித்தது. இது 17 ஆண்டுகளின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டது.
1934 – செருமனிக்கும், போலந்துக்கும் இடையே அமைதி உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: இத்தாலியின் உதவியுடன் பிரான்சிஸ்கோ பிராங்கோவுக்கு ஆதரவான படைகள் பார்செலோனாவைக் கைப்பற்றின.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படையினர் முதற்தடவையாக ஐரோப்பாவை (வட அயர்லாந்து) அடைந்தனர்.
1950 – இந்தியா குடியரசு நாடானது. ராஜேந்திர பிரசாத் அதன் முதலாவது குடியரசுத் தலைவரானார்.
1952 – பிரித்தானிய மற்றும் எகிப்திய உயர் வகுப்பு வர்த்தகர்களுக்கெதிராக எகிப்தில் இடம்பெற்ற வன்முறைகளில் கெய்ரோ நகரத்தின் நடுப் பகுதி தீயினால் அழிந்தது.
1962 – ரேஞ்சர் 3 விண்கலம் சந்திரனை ஆராய்வதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது. ஆனாலும் இத் தளவுளவி 22,000 மைல்களால் சந்திரனைத் தவறவிட்டது.
1965 – இந்தி இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது.
1980 – இசுரேலும் எகிப்தும் தூதரக உறவை ஆரம்பித்தன.
1986 – தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசு கவிழ்க்கப்பட்டது.
1991 – சோமாலியாவில் சியாத் பாரியின் அரசு கலைக்கப்பட்டது.
1992 – உருசியாவின் அணுவாயுத ஏவுகணைகள் அமெரிக்க நகரங்களை நோக்கி செலுத்தப்படமாட்டா என அரசுத்தலைவர் பொரிஸ் யெல்ட்சின் அறிவித்தார்.
2001 – குஜராத்தில் இடம்பெற்ற 7.7 அளவு நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
2015 – எசுப்பானியாவில் வான்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர், 21 பேர் காயமடைந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1763 – காருல் யோவான், சுவீடன் நோர்வே அரசர் (இ. 1844)
1880 – டக்ளசு மக்கார்த்தர், அமெரிக்க இராணுவத் தளபதி (இ. 1964)
1892 – பெசி கோல்மன், அமெரிக்க விமானி (இ. 1926)
1917 – சி. டி. ராஜகாந்தம், தமிழக நாடக, திரைப்பட நகைச்சுவை நடிகை (இ. 1999)
1921 – சித்திரசேன, இலங்கை நடனக் கலைஞர் (இ. 2005)
1921 – அக்கியோ மொறிட்டா, சப்பானியத் தொழிலதிபர், சோனி நிறுவனர் (இ. 1999)
1924 – மணியம், தமிழக ஓவியர் (இ. 1968)
1937 – வீரபாண்டி எஸ். ஆறுமுகம், தமிழக அரசியல்வாதி (இ. 2012)
1944 – அஞ்செலா டேவிசு, அமெரிக்கச் செயற்பாட்டாளர்
1956 – பி. சி. ஸ்ரீராம், தமிழகத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்
1956 – பாரத லக்சுமன் பிரேமச்சந்திர, இலங்கை அரசியல்வாதி (இ. 2011)
1958 – எல்லேன் டிஜெனிரெஸ், அமெரிக்க நடிகை
1966 – அனிதா நாயர், ஆங்கிலப் புதின எழுத்தாளர், கவிஞர்
1968 – ரவி தேஜா, இந்திய நடிகர்
இன்றைய தின இறப்புகள்
1891 – நிக்கோலஸ் ஓட்டோ, செருமானியப் பொறியியலாளர், உள் எரி பொறியைக் கண்டுபிடித்தவர் (பி. 1833)
1895 – ஆர்தர் கெய்லி, ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1825)
1903 – வில்லியம் ஸ்கீன், ஆங்கிலேய-இலங்கை நூலாசிரியர் (பி. 1847)
1946 – அதிரியான் வான் மானன், இடச்சு-அமெரிக்க வானியலாளர் (பி. 1884)
1954 – எம். என். ராய், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், புரட்சியாளர் (பி. 1887)
1963 – நீடாமங்கலம் என். டி. எம். சண்முக வடிவேல், தமிழகத் தவில் கலைஞர் (பி. 1929)
1964 – ப. அ. தோமசு, யாழ்ப்பாணம் தோலகட்டி சுவாமிகள், இறை ஊழியர் (பி. 1886)
1990 – லூயிசு மம்ஃபோர்டு, அமெரிக்க சமூகவியலாளர், வரலாற்றாளர் (பி. 1895)
2008 – ஜோர்ஜ் அபாசு, பாலஸ்தீனத் தலைவர் (பி. 1926)
2010 – சாயி, இந்திய நடனக் கலைஞர்
2010 – ஜியோப்ரி உரொனால்டு பர்பிட்ஜ், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1925)
2012 – பாரூக் மரைக்காயர், தமிழக அரசியல்வாதி, புதுச்சேரி முதலமைச்சர் (பி. 1937)
2015 – ஆர். கே. லட்சுமண், கேலிச் சித்திர ஓவியர் (பி. 1921)
இன்றைய தின சிறப்பு நாள்
ஆஸ்திரேலியா நாள் (ஆத்திரேலியா)
விடுதலை நாள் (உகாண்டா)