Categories
தேசிய செய்திகள்

BREAKING: ரூ.5, ரூ.10, ரூ.100 ரூபாய் நோட்டுகள்… ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் பழைய ரூபாய் நோட்டுகள் வரும் காலத்தில் திரும்ப பெறப்படும் தகவல் வெளியாகி நிலையில் ரிசர்வ் வங்கி அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதனால் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது என மக்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தகவல் பற்றி ரிசர்வ் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், “ரூ.5, ரூ.10, ரூ.100 பழைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என வெளியான தகவல் தவறானது. பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை” என்று பதிவிட்டுள்ளது.

Categories

Tech |