Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்…. வலைதளங்களில் அவதூறு…. கைது செய்த காவல்துறை….!!

சமூக வலைதளங்களில் அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பிய குற்றத்திற்காக முன்னாள் திமுக பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் சொர்ண லட்சுமி கார்டன் பகுதியில் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் தி.மு.க மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பதவியில் இருந்துள்ளார். இவர் கட்சிக்கு எதிராக நடந்த காரணத்தால் கடந்த ஆண்டு இவரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தி.மு.க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அ.தி.மு.க கட்சியின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி போன்றோரை குடியாத்தம் குமரன் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அ.தி.மு.க 35 ஆவது வட்ட பிரதிநிதி கோல்ட் குமரன் என்பவர் குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் குடியாத்தம் குமரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சமூக வலைதளங்களில் அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பிய குற்றத்திற்காக அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |