டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஓதையடுத்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளையும், வடலூர் ராமலிங்க தேவர் நினைவு தினத்தை முன்னிட்டு ஜனவரி 28 அன்றும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு நாட்களும் பார்கள் மூடப்படும். மேலும் விடுமுறை நாட்களில் மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.