Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்…. தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும்  ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் அன்னாசோ காவனே – மலன். காவனே காவல் அதிகாரியாக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு முகேஷ் என்ற ஒரு மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவருடைய வீட்டில் யாரும் வெளியே நடமாடததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவருடைய மனைவி, மகன் ஆகிய 3 பேரும் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்த தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று அவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் முகேஷ் பங்குச் சந்தையில் செய்த முதலீட்டில்  பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் மனமுடைந்து போன மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் அவர்களின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |